Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் – புதிய நடைமுறை அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கால பகுதியில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தக்கூடிய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நீதி அமைச்சு மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த கொலை முயற்சி – பிரபல சிங்கள பாடகி சமிதா கைது..?

wpengine

வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு

wpengine