உள்நாட்டு செய்திகள்

ஊடகங்களின் அரசியல் பிதற்றல்களால் ஆட்சியினை கவிழ்க்க முடியாது…



ஊடகச் சுதந்திரத்தை பயன்படுத்தி வெளியிடப்படுகின்ற சில செய்திகளால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது ஊடகச் சுதந்திரத்தை பயன்படுத்தி வெளியிடப்படுகின்ற சில செய்திகள் அரசாங்கத்துக்கு எதிரான அநாவசிய விமர்சனங்களாகவே இருக்கின்றன.

இவற்றைப் பார்க்கின்றவர்கள் அரசாங்கம் நாளையே கவிழ்ந்து விடும் போல் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இவ்வாறான போலி சூழ்ச்சிகளால் அரசாங்கத்தினை ஒருபோதும் கவிழ்க்க முடியாது.

அவ்வாறு கனவு கண்டுக் கொண்டிருக்கின்றவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை. அரசாங்கம் என்ற வகையில் பொதுமக்களின் முக்கியத் தேவைகளை அறிந்து நாம் செயற்படுகிறோம், எனவும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை

wpengine

சொய்சாபுர உணவக தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

wpengine

சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் புகைப்படங்கள்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

wpengine