Top Story 1சூடான செய்திகள்

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், மதரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் இருவருக்குப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வஸீம் கொலையின் CCTV இற்றைவரை வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை நீதிமன்றில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

wpengine

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து (update)

wpengine