உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 05% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களது கட்டுப்பணம் அரசுடமைக்கு…



நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 05% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இம்முறை குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5,075 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம் எல்பிட்டிய பிரதேச சபைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும், அதுதொடர்பான வழக்கு எதிர்வரும் 03ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும், அதுதவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் 03ம் திகதி வௌியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

wpengine

விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

wpengine

சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா

wpengine