Top Story 2உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றன.

இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையும் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.

Related posts

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் வெளியீடு..

wpengine

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல்; சஜித் விசனம்

wpengine