உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் விவகாரம் – அரசுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு வழக்குத் தாக்கல்



உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொடர்ந்தும் அரசாங்கம் தள்ளிப் போட்டு வருவதற்கு எதிராக பெப்ரல் அமைப்பு வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

அரசாங்க தரப்பில் பல தரப்பினரும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து பல்வேறு வகையில் தகவல்களைத் தெரிவித்து தேர்தலை தள்ளுபடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் உள்ளுராட்சி சபைகள் அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையெனவும், இதனால், அடுத்து வரும் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

இளநீர் விலை சடுதியாக அதிகரிப்பு

wpengine

ஆளில்லா விமானத்தால் விமானப்படைக்கு பெரும் நஷ்டம்!

wpengine