உலக செய்திகள்

உலக பொருளாதார மாநாடு – சுவிஸ்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு…



சுவிஸ்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் இடையே அந்நாட்டின் அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார்.

சுவிஸ்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று(23) ஆரம்பமாகியது. இம் மாநாடு 26-ம் திகதி வரை 4 நாட்கள் நடைப்பெறவுள்ளது.

இன்று மாநாட்டின் இடையே சுவிஸ்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். குறித்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தகவலை பதிவு செய்துள்ளார்.

சுவிஸ்லாந்து அதிபருடனான சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் குறித்து மதிப்பாய்வு செய்ததுடன், அதனை மேலும் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் மோடி அழைத்து வட்டமேசை கூட்டம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிரிய சிறுவன் உலகுக்கு கூறிய அவலம்.

wpengine

மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை

wpengine

சிரிய குழந்தைகள் வைத்தியசாலையில் குண்டுவெடிப்பு – 50 இற்கும் அதிகமானோர் பலி

wpengine