விசேட செய்தி

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு – விகாரமகாதேவி பூங்காவில்



உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு நாளையும் (05) நாளை மறுதினமும் (06) ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.
‘7 பில்லியன் மக்கள்- ஒரே பூமி- பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும்.

இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வின் பிரதான உரையை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆற்றவுள்ளார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன- கொழும்பு நகரசபை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.

சூழல் இராஜாங்க அமைச்சின் ஆலோசனையின் பேரில் சுற்றாடல் மக்கள் அமைப்பு- கொழும்பு மாநகரசபை என்பன இணைந்து இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதனை முன்னிட்டு நாளை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை விழா நடைபெறவுள்ளதுடன் அதன் பின்னர் கண்காட்சியும் காண்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி இராஜினாமா

wpengine

புகையிரத சேவையில் தாமதம்

wpengine

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விஜயம் விரைவில்

wpengine