விளையாட்டு

உலக கிரிக்கெட் இற்காக மீண்டும் சங்கா…



ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு தருமாறு குமார் சங்ககார உள்ளிட்ட மாலிபோன் கிரிக்கெட் கழகம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்த கழகம் கூடியது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் செல்வந்த மற்றும் பலமான கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒலிம்பிக் போட்டிகளில் தமது கிரிக்கட்டை இணைக்க அவ்வளவாக விரும்பவில்லை.

அவ்வாறு இணைக்கப்பட்டால் இந்திய கிரிக்கெட் அதிகாரிகளின் அதிகாரம் சரிந்து, அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு பொறுப்பு கூற வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக அவர்கள் இதற்கு விரும்பவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

#reeshma

Related posts

இலங்கை அணிக்கான பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் முழுமையான விளக்கம்…

wpengine

இரண்டாவது முறையும் விம்பிள்டன் வெற்றியை சுவீகரித்தார் மரே.

wpengine

ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு – அம்லா நீக்கம்…

wpengine