உள்நாட்டு செய்திகள்

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இந்தோனேசியாவிற்கு விஜயம்



உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 3ம் திகதி இரவு பிரதமர் மீளவும் நாடு திரும்ப உள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசீம், சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Azeem Kilabdeen

உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் – பிரதமர்

News Editor

அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்

Azeem Kilabdeen