Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகம் முழுவதும் 58 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,792,253 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,498,730
ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸினால் 357,467 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் பாதிப்பு ஒரு இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

UPDATE – ஓமான் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்

wpengine

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி

wpengine

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று(20) பதவி ஏற்பு…

wpengine