ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு வாய்ப்பில்லை – இந்தியா ஆரூடம்..



(FASTGOSSIP – COLOMBO) – எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவ் ஆருடம் வெளியிட்டுள்ளார்.

1983–ம் ஆண்டில் உலக கிண்ணத்தினை வென்ற இந்திய அணியின் தலைவனான கபில்தேவ் இது தொடர்பிலான பேட்டியொன்றில் தெரிவிக்கையில்;

“உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாசாரத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டதாகும்.

இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா அணிகளுடன் இந்தியாவும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறும். அதன் பிறகு போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும். அரைஇறுதிக்கு பிறகு முன்னேறுவதில் அதிர்ஷ்டமும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணியின் கூட்டு முயற்சியும் அவசியமானதாகும்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் மற்ற அணிகளை விட வலுவானதாகும். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவையாகும்..” என தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று ஹெல்பொடையில் நடந்த 10 வயது பாடசாலை சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக காமுக நாயின் படங்கள்…

wpengine

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான உத்தியோகபூர்வமற்ற அட்டவணை வெளியீடு

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி

wpengine