உள்நாட்டு செய்திகள்

உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையினால் அரசின் வருவாயில் எந்தப்பாதிப்பும் இல்லை – பிரதமர்



VAT மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை அரசாங்கத்தின் வருமானத்தைப் பாதிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த வரித் திருத்தம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான முதலாம் வாசிப்பு கடந்த 8ம் திகதி இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த வரித் திருத்த யோசனை மீதான இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் 23 ஆம் திகதி மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  மே மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரித் திருத்த யோசனை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கோட்டாவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்க தீர்மானம்!

wpengine

கொள்ளுப்பிட்டி : 55 கொரோனா தொற்றாளர்கள்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் பயணம்…

wpengine