உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா வேலைத்திட்டம் பற்றிய அறிக்கை இன்று அமைச்சரவையில்…



உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று(18) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழு, அண்மையில் பண்டாரவளை பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், பல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தனர்.

மேலும், உமா ஓயா வேலைத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த, விஷேட அமைச்சரவைப் பத்திரமும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஸ்டஈடு வழங்கல் மற்றும் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் போன்ற யோசனைகள் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்..

wpengine

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா…

wpengine

வேட்புமனுக்கல் நிராகரிப்பு தொடர்பிலான மனுக்கல் இன்று ஆராய்வு..

wpengine