உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உதயங்க வீரதுங்கவை நாடுகடத்த முடியாது என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவிப்பு…



மிக் விமானக் கொள்வனவில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சர்வதேச பொலிசாரின் தடுப்பில் உள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடுகடத்த முடியாதுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசின் கோரிக்கைகளை நிராகரித்து ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் இலங்கைக்கு இடையே கடந்த 2002ம் ஆண்டு நாடுகடத்தும் ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாட்டுக்கு வந்திருந்த நிலையில், இலங்கை பாராளுமன்றில் அது நிறைவேற்றப்படாமையானது இதற்கு காரணம் என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

$Rishma

Related posts

அரச தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது..

wpengine

இன்று முதல் முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிப்பு…

wpengine

சப்புகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

News Editor