உள்நாட்டு செய்திகள்

உதயங்கவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது….



மிக் விமானங்கள் 04 இனைக் கொள்வனவு செய்கையில் இடம்பெற்ற பண மோசடியுடன் தொடர்புடைய 7.833 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட பொது மக்கள் நிதி மோசடி வழக்கு விசாரணைகளில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸ் தலைமையகம் ஒரு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அதனை சர்வதேச பொலிசார் மூலம் நடைமுறைப்படுத்த கோரியதாகவும், அதன்படி சர்வதேச பொலிஸ் தலைமையகத்தினால் முதலில் நீல அறிவிப்பு விடுக்கப்பட்டு பின்னர் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

#rishma

Related posts

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine

லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine