உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யுக்திய சோதனை நடவடிக்கையின் போது விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடேரமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்

இதன் போது போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 9X9 மில்லி மீற்றர் ரக 97 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் டுபாயில் தங்கியிருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ளும் களுதுர தினேஷ் ஷாமந்த டி சில்வா என்ற”பபி” என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 70வது வருட பூர்த்தி..

wpengine

FCID இனால் “மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ” பரிசோதனைக்கு

wpengine

இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கினை விசாரணை செய்ய திகதி அறிவிப்பு.

wpengine