உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி



சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலஞ்சென்ற அஸ்கிரி பீட மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறிய உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றை கோரியிருந்தார்.

விடயங்களை பரிசீலனை செய்து பார்த்த கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி நிஷாந்த பீரிஸ் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine

சட்டவிரோதமாக 1800 லீற்றர் டீசலை கொண்டு செல்ல முற்பட்ட 7 பேர் கைது

wpengine

சதொச, முன்னாள் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine