உள்நாட்டு செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு..



உடவளவை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஐந்து இன்று(23) அதிகாலை 1.30 மணியளவில் இருந்து இரண்டு அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய மஹாவலி அதிகார சபையின் பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நேற்றிரவு(22) இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் அடி வரை உயர்ந்துள்ளமை காரணமாக இவ்வாறு சகல வான்கதவுகளையும் இரண்டு அடிகளால் திறந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வளவை நதிக்கு நிமிடத்திற்கு இரண்டாயிரம் கன அடி நீர் சேர்கிறது. இதன் காரணமாக நதியின் கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மஞ்சுளா பெரேரா கைது

wpengine

“யாழ் மாவட்ட முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கிய மகான் மாவை”

Azeem Kilabdeen

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

wpengine