உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில், பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி பணிப்பு..



உடன் அமுலுக்கு வரும் வகையில், விலை அதிகரித்துச் சென்றுள்ள பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்க்கை செலவு குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று(17) இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அரிசி, மீன் வகைகள், கருவாடு, நெத்தலி மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்து கூட்டுறவு மற்றும் சதோச ஊடாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு வீதம் அதிகரித்துச் சென்றுள்ளதாக நேற்று(17) இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள் பல சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

(rizmira)

Related posts

குமார் குணரத்னத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்..!

wpengine