Top Story 3உள்நாட்டு செய்திகள்

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய முதற்தடவையாக உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இதன்படி 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய பிரஜைகள் மத்தள விமான நிலையத்தில் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விசேட திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகளை கருத்திற் கொண்டு நாட்டின் விமான நிலையங்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 150 பேர் கைது

wpengine

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

wpengine

ஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று

wpengine