உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“உக்குவா” கொலையில் சிக்கினார் சந்தக நபர்



தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என அடையாளங்காணப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கொலை தொடர்பான விசாரணைகனை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

குறித்த மோட்டார் சைக்கிளானது பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் நபருடையது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும்; குறித்த மோட்டார் சைக்கிள், கொழும்பிலுள்ள வர்த்தகருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், வர்த்தகரிடமிருந்து இந்த மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

அமித் வீரசிங்கவை தாக்கிய நபர் கைது…

wpengine

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

தெனவக்க ஆற்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

wpengine