உலக செய்திகள்

ஈரான் வெள்ளம் – இதுவரை 19 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|IRAN) ஈரானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்யக் கூடும் என்பதால் ஈரானின் வடக்குப் பகுதியும் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதோடு,நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவினால் பலி

wpengine

சுமாத்ரா தீவின் எரிமலை வெடிப்பு – 5,000 பேர் வெளியேற்றம்

wpengine

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம்

wpengine