உலக செய்திகள்சூடான செய்திகள்

Update – 7.3 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுமார் 400 பேர் பலி.. (VIDEO)



ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 400 பேர் பலியாகியுள்ளனர். 6,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

————— UPDATE

 7.3 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுமார் 135 பேர் பலி.. 

 

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் இன்று(13) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட குறித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தில் சுமார் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

திமிங்கிலத்தின் வாந்தியுடன் பிடிபட்ட 2 பேர்..!

wpengine

கிழக்கு மாகாண நிர்வாகம் தமது செயற்பாடுகளை நியாயமாகச் செய்யாவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்..!

wpengine

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு

wpengine

1 comment

கலீல் பாகவீ Nov 13, 2017 at 10:56 am

அதன் எதிரொலி குவைத் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. பல கட்டடங்கள் குலுங்கின. நள்ளிரவு வரை பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதங்களோ, வேறு விதமான ஆபத்துகளோ ஏற்படவில்லை.

இருப்பினும் பல இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். குவைத் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விழிப்புடனே கழிந்தது என்றால் அது மிகையல்ல.

குவைத்திலிருந்து பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Comments are closed.