உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் உயிரிழப்பு…



ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு இன்று(18) காலை சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ATR-72 என்ற குறித்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் புறப்பட்டு, ஈரானின் இஸ்பாஹன் மாநிலத்தில் உள்ள செமிரோம் மலைப்பகுதிக்குள் சென்றபோது, ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த 66 பேரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அஸீமான் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

தெல்தெனிய சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட 8 பேர் விடுதலை…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைகள் ஆரம்பம் – ஆஸி.ஊடகம் செய்தி.

wpengine

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

wpengine