உலக செய்திகள்

ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்



(ஃபாஸ்ட் நியூஸ் |  ஈரான்) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் காமெனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வந்தார். ஒபாமா காலத்தில் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அவர் அறிவித்தார்.

மேலும் அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இந்த சூழலில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இது டிரம்ப் மேலும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க போகிறாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்ற போகிறாரா என்பதை தீர்மானிக்க உள்ளது.

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

Related posts

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

wpengine

வங்காளதேசத்தில் படகு விபத்தில் 2 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு…

wpengine

முக கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம்

wpengine