உள்நாட்டு செய்திகள்

இன்றும் இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்…



இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று(02) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை பாவனைக்கு உட்படுத்துவதற்காக வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

பழைய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாத வகையில், தடை ஏற்படுத்தப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தனியார் பஸ் ஊழியர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதிபதிகள் 72 பேருக்கு இடமாற்றம்

wpengine

சீன உரத்துக்கான பணம் செலுத்தபட்டது

wpengine

ஜெ. மான்னப்பெரும இராஜினாமா

wpengine