உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபைக்கு மேலும் 200 புதிய பேருந்துகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில், நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய 200 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், விலைமனுக் கோரலின் பிரகாரம், அங்கீகாரம் பெற்ற உள்ளூர் நிறுவனங்களின் ஊடாக, அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகேவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று…

wpengine

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று(05) மாலை

wpengine