உள்நாட்டு செய்திகள்

இ.போ. சபைக்கு புதிதாக 500 பஸ்கள் – அமைச்சரவை அனுமதி…



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நகரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக 50-54 ஆசனங்களை கொண்ட 400 பேரூந்துகளையும், கிராமிய மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக 32-35 ஆசனங்களை கொண்ட 100 பஸ்களையும் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

கம்பஹா பகுதிகளில் 18 மணிநேர நீர்விநியோக தடை

wpengine

உலக உணவுத் திட்ட தலைவருடன் பிரதமர் நீண்ட நேரம் பேச்சு

News Editor

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 67வது நிறைவாண்டு இன்று…

wpengine