உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து கவிழ்ந்ததில் மூவர் காயம்..



(FASTNEWS | COLOMBO) – கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்று(19) அதிகாலை பதுளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பேரூந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி, மதகு ஒன்றில் மோதி கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிசாருக்கு அதிகாரம்…

wpengine

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்…

wpengine

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்..!

wpengine