உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக அறிவிப்பு..



இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

குறித்த இந்த விடுமுறைக் காலம் எதிர்வரும் 25ம் திகதி முடிவடையவுள்ள நிலையில் ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடுமுறை நீடிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

21ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் சரத் வீரசேகர

wpengine

இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…

wpengine

கண்டி – திகன சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு…

wpengine