Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலில் விவசாயம் புரிந்துவிட்டு இலங்கை திரும்பினால் 2.5 ஏக்கர் காணி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேலில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கை இளைஞர்களுக்கு 2.5 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனுஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்களாக உயர்த்துவதற்கு பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஆண்டாக அமையும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

தற்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு செல்லும் தொழிலாளர்கள் விவசாய அறிவும் அனுபவமும் பெற்று இலங்கைக்கு திரும்பி வருவதால் இலங்கையில் தமது அறிவை பயன்படுத்த முடியும் என பயிர்ச்செய்கைக்காக 2.5 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு காணி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

விவசாய தொழில் முனைவோராக அவர்களின் பொருளாதார பலத்தை உயர்த்துவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

Related posts

கடற்பாதுகாப்பு அலுவலகங்களுக்கான அவசர தொலைபேசி சேவை அறிமுகம்.

wpengine

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

wpengine

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தம் – சபையில் சஜித் சுட்டிக்காட்டு

News Editor