உலக செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலிற்கு படையினரை அனுப்பபோவதில்லை- அமெரிக்கா..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை எனஅமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு தனது படைகளை அனுப்பும் நோக்கம் எதுவுமில்லை எனினும் அமெரிக்கா பிராந்தியத்தில் தனது நலன்களை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேல் மேலும் பல வேண்டுகோள்களை விடுக்கலாம் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா அவற்றை வேகமாகபூர்த்தி செய்ய முயலும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாசிற்கு ஆதரவளித்ததன் மூலம் ஈரான் இதில் தொடர்புபட்டுள்ளது என்பது குறித்து சிறிதளவு சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் எனினும் ஈரான் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் அமெரிக்கா காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச மருத்துவ அதிகாரிகள் அரசுக்கு அவதான நிலையினை சுட்டிக்காட்டி எச்சரிக்கை..

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிக்கு விஜயம்…

wpengine

காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!

wpengine