உள்நாட்டு செய்திகள்

இவ்வார இறுதியில் கொழுப்பு – கண்டி விசேட புகையிரத சேவை.


இவ்வார இறுதியில் கொழும்பில் இருந்து கண்டிக்கு இரண்டு விசேட புகையிரத சேவைகள் நடைபெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை போயா தினம் என்பதால் அன்றைய தினம் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனையடுத்தே குறித்த புகையிரத சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளைய தினம் மாலை 5.20இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டியை நோக்கி விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை மறுதினம் காலை 5.50 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதம் புறப்படும் எனவும் புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களுக்கான அறிவித்தல்

wpengine

தனமல்வில துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்…

wpengine