உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இவ்வார இறுதிக்குள் எரிபொருள் விலைக்கு தீர்வு – அமைச்சர் சந்திம



இவ்வார இறுதிக்குள் எரிபொருள் விலை பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

எரிபொருளுக்கான புதிய சூத்திரம் நிதியமைச்சால் அங்கீகரிக்கப்பட்டதும் புதிய விலைகள் தீர்மானிக்கப்படுமெனவும் புதிய விலைகள் பற்றி பல்வேறு தரப்பிலும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் பொதுமக்களின் நலன்கருதி நிதியமைச்சு வழங்கும் பரிந்துரைகள் தீவிர கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த வருடம் அரசு இரண்டு முறைகள் எரிபொருளின் விலைகளைக் குறைத்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மித்தெனிய துப்பாக்கிச்சூடு – மூவர் கைது

wpengine

புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து – புகையிரத போக்குவரத்து பாதிப்பு

wpengine

இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள்

wpengine