உள்நாட்டு செய்திகள்

இவ்வாரத்தில் 5 நாட்கள் பாடசாலை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும்  கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்து பிரச்சினை காணப்படும் பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சகல மாகாண அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை வாரத்தில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உரிய வகையில் அதிபர்களினால் சலுகை வழங்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகை வழங்கப்பட வேண்டிய முறைமை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் பாடங்களை உரிய முறையில் கற்பிப்பதற்காக பாடசாலை நேரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலை நேரத்திற்கு மேலதிக பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

wpengine

விண்கற்கள் மழை பொழியும் சாத்தியம்

wpengine

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

wpengine