உள்நாட்டு செய்திகள்

இளைஞர்கள் 11 பேரை கடத்திய சம்பவம் – டீ.கே.பீ தசநாயக்க தரப்பில் நீதிமன்றில் கோரிக்கை..



இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ தசநாயக்க உள்ளிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(08) அழைக்கப்பட்ட போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணியால் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டிருந்த நிலையில் , பிரதிவாதி சட்டத்தரணியின் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கோட்டை நீதவான் அறிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

சஜின் வாஸ் பிணையில் விடுதலை

wpengine

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

wpengine