உலக செய்திகள்விசேட செய்தி

இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து…



மேற்கு இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

8 தீயணைப்பு வாகனங்ள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக இலண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ அனர்த்தம் ஏற்பட்டவுடன் இலண்டன் நேரப்படி இன்று(10) காலை 12.10 மணியளவில் சம்பவம் இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக பெருநகர் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள சந்தையில் கிட்டத்தட்ட 1000 கடைகளுக்கு மேல் உள்ளதுடன், சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இலண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

wpengine

ஈரானின் இராணுவ படைப்பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

wpengine

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைக்கு ஈரான் அதிருப்தி

wpengine