உள்நாட்டு செய்திகள்

கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதியொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை தொடரும்

wpengine

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை

wpengine

அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியாது

wpengine