உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு :முன்னாள் ஜனாதிபதி மறுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய 800 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலி ரதன தேரர் அடிக்கடி தம்மிடம் அழைத்து வந்து, இளைஞரை விடுவிக்குமாறு கோரியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
ரதன தேரரும், இளைஞரின் உறவினர்களும் வழங்கிய கோரிக்கை கடிதங்களை தாம் கண்டுகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொடவுக்கு பிணை

wpengine

முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

wpengine

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine