உள்நாட்டு செய்திகள்

இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது.. – வைத்தியக் கல்வி குறித்து திருத்தம்…



இலங்கை வைத்திய சபையின் அவசரக் கூட்டம் ஒன்று நாளை(25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த இந்தக் கூட்டத்திற்கு நாளை(25) பகல் 01.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற நேற்றைய சந்திப்பின் போது, வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட, மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

 

(rizmira)

Related posts

யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்…

wpengine

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து சந்திமால் விலகல்…

wpengine

போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine