வணிகம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..



இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்தர ரத்நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய கடந்த 13ஆம் திகதி இராஜினாமா செய்திருந்த நிலையிலேயே, அப்பதவிக்கு, துமிந்தர ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே, முதலீட்டுச் சபையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலீட்டுச் சபையின் பணிப்பாளர்களாக மங்கல பீ.பீ.யாபா மற்றும் அஜித் குணவர்தன ஆகியோர் நிமியக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண ரஷ்யா விருப்பம்…

wpengine

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்

wpengine

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen