Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற்படையினரால் கைது..!

05 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்பரப்பிற்கு அப்பால் இந்திய கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் இன்று (16) தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

wpengine

இலங்கையில் மேலும் ஒருவர் குணமடைந்தார்

wpengine

தகாத உறவு – கள்ளக்காதலனை கொலை செயத கணவன்

Azeem Kilabdeen