உள்நாட்டு செய்திகள்

இலங்கை மீது தனது ஆர்வத்தை தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்



நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்  எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார். அண்மையில்,லண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் அமைப்பினர் – இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டார்.

இதன்போது, தமிழ் டயஸ்போரா அமைப்பினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்ககை கொண்டு சொல்ஹெய்ம் விளக்கமளித்தார். இக்கருத்துக்களை, அமைச்சர்  மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டிசம்பர் மாதம் வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

wpengine

கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் “சாகரிகா எக்ஸ்பிரஸ்” இனது நேர அட்டவணையில் மாற்றம்

wpengine

பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

wpengine