உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…



இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று இன்று(13) முன்வைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 வருட காலமாக சட்டவிரோதமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும் மாலபே சைட்டம் பட்டச்சான்றிதழை விற்பனை செய்யும் நிறுவனத்தை சட்ட ரீதியானதாக்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரசாயண பரிசோதனை பயிற்சிகள் போதுமானதாக இல்லை என்பதன் காரணமாக மருத்துவ சட்டமூலத்தின் கீழ் தனிப்பட்ட மருத்துவ வித்தியாலய மாணவர்கள் பதிவு செய்வதை நிராகரித்து இருந்தது.

எனினும், இலங்கை மருத்துவ சபையில் அவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்யும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

Related posts

கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் FCID இனது முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.

wpengine

இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

wpengine

NAITA நிறுவனத்தின் புதிய தலைவராக ஹபீஸ் நசீர் நியமனம்…

wpengine