உள்நாட்டு செய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைக்கும் நோக்கில் சர்வதேச நிதியினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் W.D. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், நாட்டு மக்கள், வௌிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், வௌிநாட்டவர்கள், வௌிநாட்டு இருப்பு மற்றும் நிதியத்தை, இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவருமாறு மத்திய வங்கியின் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு இது பாரிய ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்தவும், வரி வசூலிப்பை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுனர் அறிவித்துள்ளார்.

சர்வதேசத்தில் இருந்து நிதியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு, நேற்று(02) முதல் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

காலை 9 மணி வரையான நிலவரம்…

Azeem Kilabdeen

கண்டி நில அதிர்வு குறித்து ஆய்வு

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine