உள்நாட்டு செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபையினருக்கு கோப் குழு அழைப்பாணை



இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபையினரை மீண்டும் கோப் குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரச்சினைகள் இருந்தால் அது பற்றிய விடயங்களை முன்வைக்க முடியும். அதற்கு தீர்வுகளை வழங்க கோப் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் கோப் குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை’..!

wpengine

தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு…

wpengine

யாழ்.பொலிசாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து…

wpengine