உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு கோப்குழு அழைப்பாணை



மத்திய வங்கியின் திறைசேரி முறி பத்திர முறைகேடு சம்பந்தமாக விசாரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நாளைய தினம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு (கோப்குழு) அழைக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரை தவிர மேலும் சில பிரதான அதிகாரிகளிடம் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தலைவரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தலைமையில் இன்று கூடவுள்ளது.

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் சம்பந்தமாக அந்த நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து இந்த தெரிவுக்குழு ஏற்கனவே விசாரணைகளை நடத்தியுள்ளது.

Related posts

விசேட புகையிரத சேவைகள்…

wpengine

Update – காமினி செனரத் உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது வாக்குமூலங்களை பதிவு செய்ய CID இற்கு உத்தரவு…

wpengine