விளையாட்டு

இலங்கை மண்ணில் தொடரினை வென்று புதிய ஆண்டை ஆரம்பிப்போம் – ஹத்துருசிங்க அதிரடி…



இலங்கை மண்ணில் பங்களாதேஷ் சிறந்ததொரு வெற்றியினை பதிவு செய்யும் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஷந்திக்க ஹத்துருசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று(07) நடைபெறுகின்ற முதலாவது டெஸ்ட் போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளருமான ஹத்துருசிங்க பயிற்றுவித்த அணியினர், 2014ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றது.

சவால்மிக்க போட்டியாக இது அமைந்தாலும் எமது வீரர்கள் கடுமையான நெருக்கடியினை எதிரணிக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த தொடரின் மூலம் பங்களாதேஷ் அணி சிறந்த அணி என எடுத்துக்காட்ட நல்ல சந்தர்ப்பம் ஒன்று அமைந்துள்ளது.

குறிப்பிட்ட வெற்றியொன்றினை இம்முறை நாம் கண்டிப்பாக பெற வேண்டும், அதையிட்டு பங்களாதேஷ் அணியினை சிறப்பான முறையில் தயாற்படுத்தியுள்ளேன்.

அதேபோல் இலங்கை மண்ணில் தொடரினை வென்று வெற்றிகரமாக புதிய ஆண்டை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம் எனவும் ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை ரசிகர்களின் ஆதரவுடன் சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி கைப்பற்றியது…

wpengine

கிரிக்கெட் சூதாட்டம் – இர்பானுக்கு மரண தண்டனை…?

wpengine

இந்தியாவுக்கு ஒரு சட்டம் பாகிஸ்தானுக்கு ஒரு சட்டமா? : சயீத் அஜ்மல்

wpengine