உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் சாதித்து இந்திய அணி வீரர்களின் பட்டியலில் அஷ்வின் முன்னிலையில்…



சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தியதுடன், 2,000 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின்னும் இடம் பிடித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றதனூடாக 2,000 ஓட்டங்களை அவர் கடந்துள்ளதோடு;
இதில் 11 அரைசதங்களையும், 4 சதங்களையும் அவர் பெற்றுள்ளார். இதேவேளை, 275 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இதனூடாக 2,௦௦௦ ஓட்டங்களை கடந்ததுடன், 200 இற்கும் அதிகமான விக்கட்டுக்களை வீழ்த்திய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

முத்துராஜா யானை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது..!

wpengine

சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்

wpengine

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒருபோதும் நிறுவப்போவதில்லை – பிரதமர்…

wpengine